திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் 89 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் மு.நாவளவன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் பா. சிவனேசன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம்,பொருளாளர் சிங்கு தெரு எஸ். ஆர். ராஜேஷ்,வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன் கலந்துகொண்டு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.