ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நுகர்வோர் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் எபி ஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவள்ளி கலந்து கொண்டு, சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் நாம் உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் குறித்தும், சாலை விபத்துக்கு மனித தவறுகள் தான் முக்கிய காரணம் எனவும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.

நிறைவாக வரலாற்றுத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி கார்த்திகா நன்றியுரை வழங்கினார். நிகழ்வினை மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி காவியா தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *