ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகளை வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஜாதி வன்கொடுமை மால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீரு தவிகள் தொடர்பான முறையீடுகளை 18002021989 அல்லது 14586 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களிலும் பணி நேரத்தில் மட்டும் புகார் அளித்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *