கும்பகோணம் அருகே மெலட்டூர் பாகவத மேளா வித்யாலயாவின் 11 ஆம் ஆண்டு விழா….

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே பங்கேற்பு….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் பாகவத மேளா வித்யாலயாவின் 11 ஆம் ஆண்டு விழாவும் குரு மெலட்டூர் ஸ்ரீ எஸ். நடராஜன் 81 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவிற்கு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமை வகித்து மெலட்டூர் எஸ். நடராஜனுக்கு தலைக்கோல் ஆசான் பட்டத்தினை அவருடைய மகள் பாகவத மேளா வித்யாலயாவின் இயக்குனர் பிரியம்வதா முரளியிடம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஹைதராபாத் பி .எஸ். தெலுங்கு பல்கலைக்கழகத்தின் நடனத்துறை தலைவர் டாக்டர் வனஜா உதய், தஞ்சாவூர் கலாச்சார சுற்றுகள் நிறுவனர் பாலகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக முதல் நிகழ்ச்சியாக திருக்கருக்காவூர் சகோதரர்கள் சரவணன் மற்றும் குழுவினரின் மங்கள வாத்தியம் நாதஸ்வரம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து கும்பகோணம் ஸ்ரீ அனந்த நாராயண பகவதர் மற்றும் குழுவினரின் நடராஜ ஹவனம் நடைபெற்றது.

திருமானூர், மற்றும் திருவையாறு ஔவை கோட்ட மாணவிகளின் ஔவை நல்வழி பாடல்களும் மெலட்டூர் வி .ஜி
என் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் வித்யாலயா மாணவர்களின் தேசிய ஒருமைப்பாடு பின்னல் கோலாட்டமும்
அதனைத் தொடர்ந்து வித்யாலயா மாணவர்களின் சிலம்பாட்டமும் ,ஆரி, எம்பிராய்டரி காட்சியும்
மங்கள ஆரத்தி மற்றும் நாட்டியாரம்பம் நடைபெற்றது.

மாலையில் தஞ்சாவூர் வித்வான்கள் சதீஷ்குமார், ராமமூர்த்தி, சரவணன் ஆகியோரின் வேணு வாத்ய சமர்ப்பணமும் , ஹைதராபாத் டாக்டர்.வனஜா உதய்யின் குச்சிப்புடி நாட்டிய சமர்ப்பணம் நடைபெற்றது.

விழாவில் அரசு அதிகாரிகள் மாணவ மாணவிகள் கிராமமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மெலட்டூர் பாகவத மேளா வித்யாலயாவின் இயக்குனர் பிரியம்வதா முரளி செய்திருந்தார்.

முடிவில் துணை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *