கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை மண்டலம் தஞ்சை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் முகமது இப்ராஹிம் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளரும முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத்தலைவர் ராஜராஜ சோழன் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல செயலாளர் அறிவொளி தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் சிங் ரமேஷ்குமார் கலந்துகொண்டு தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது தொழில் நுட்ப நிர்வாகிகள் திமுக ஆட்சியில் நடைபெறும் அநீதிகளை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.ஐயப்பன், பாபநாசம் பேரூர் செயலாளர் கோவி.செழியன் , பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன்மற்றும் அதிமுக நிர்வாகிகள் ,தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.