புதுப்பட்டினம் கேலக்ஸி இன்டர்நேஷனல் மழலையர் துவக்கப்பள்ளியில் விஜயதசமி திருநாளில் மாணவர் சேர்க்கை
விஜயதசமி என்பது தீய சக்தியான மகிஷாசுரனை துர்காதேவி வதம் செய்த நாளாகும். அன்று எந்த ஒரு காரியத்தை துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விஜயதசமியன்று பள்ளிகளில் சேர்ப்பார்கள் அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மற்றும் அனுபுரம் பகுதியில் புகழ்பெற்ற கேலக்ஸி இன்டர்நேஷனல் ப்ரி ஸ்கூல் எனும் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது .
விஜயதசமி தினமான நேற்று மழலையர் சேர்க்கை நடைப்பெற்றது. புதுபட்டினம் பள்ளி வளாக கொலு மண்டபத்தில் .ஒரு கலசம் அமைத்து விநாயகர், சிவபெருமான், சரஸ்வதி, லட்சுமி என அனைத்து தெய்வங்களுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்றது முதலாவதாக மழலைகள் ஒவ்வொருவராக குரு வணக்கத்துடன் தங்கள் பெற்றோர் மற்றும் பள்ளி இயக்குனர் ர. பாபு, தாளாளர் ஸ்டுடியோ மோகன் மற்றும் பள்ளி முதல்வர் சுதா மோகன் முன்னிலையில் பச்சரிசியில் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை எழுதி மழலையர் தங்களது கல்வியை துவங்கினர் திரளான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர்.