கோவை மாநகராட்சி 81 வது வார்டு சார்பாக நடைபெற்ற மாசில்லா ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பிளாஸ்டிக்,அட்டைபெட்டி போன்ற உலர் கழிவுகளை சேகரிப்பதற்கான வாகனம் துவங்கப்பட்டது..
கோவை மாநகராட்சி மற்றும் இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு, சாந்தம்மாள் சுந்தரம் அறக்கட்டளை,
இணைந்து மாசில்லா ஆயுத பூஜை விழா கோவை பாரதி பூங்கா பகுதியில் நடைபெற்றது..
இதில் உலர் கழிவுகளான காட்டன்,பிளாஸ்டிக் பெட்டிகள்,
தெர்மோகோல்,
பயனற்ற எலக்ட்ரானிக் பொருட்களான இ.வேஸ்ட் ஆகியவற்றை தரம் பிரித்து கொடுப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார்,
மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உலர் கழிவுகளை சேகரிப்பதற்கான ஐந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்..தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப்பையை அப்பகுதி மக்களுக்கு வழங்கினர்.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் AGWOI செயல் தலைவர் DR. G. முஹமது ரபீக் இத்திட்டத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்,
அப்பகுதி மக்கள் சேகரித்த உலர் கழிவுகளை பெற்று NOTHING IS WASTE மறுசுழற்சி செய்ய உதவும் வகையில் ஆயுதபூஜையை ஒட்டி தங்கள் இடங்களை சுத்தம் செய்யும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நிறுவனங்கள் உலர் கழிவுகளை தனியாக பிரித்து வைத்து மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் படி இத்திட்டக்குழு சார்பாக கேட்டு கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிச்செல்வன் , துணை கமிஷனர் சிவகுமார் , சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் , நகர சுகாதார அதிகாரி பூபதி , 69வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார்,
SSMC ஜான் எரிக் வில்லியம்ஸ், CCTA உமர் கத்தாப், உட்பட பலர் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்ச்சியில் ஒரே நாளில் சுமார் 9,725 கிலோ குப்பைக்கு போகக்கூடிய உலர் கழிவுகள் மறுசுழற்சிக்காக பெறப்பட்டது குறிப்பிடதக்கது..