ஒட்டப்பட்டி கிராமத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கே.பி. முனுசாமி கழக கொடி ஏற்றி வைத்தார்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தட்ரஅள்ளி ஊராட்சி ஒட்டப்பட்டி கிராமத்தில் கழக கொடியேற்று விழா காவேரிப்பட்டினம் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கே.பி.எம்.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது
இந்த விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விமலாசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். கழக கொடியினை கழகத் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி.முனிசாமி கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ. சி.வி. ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், பெருமாள் எம் பி, போச்சம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால்,முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன்,பேரூர் கழக செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய அவைத்தலைவர் வடிவேலன் மாவட்டத் துணை செயலாளர் வழக்கறிஞர் பிரிவு மோகன், நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகையன் ரத்தின ம் குணசேகரன் மகேஷ், மற்றும் ராஜாஅண்ணாமலை, பண்ணந்தூர் பழனிச்சாமி, துரை,மஞ்சு சரவணன், அகரம் கருப்பண்ணன், சாம்பசிவம் மற்றும் கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், முனுசாமி சீனிவாசன் தியாகராஜன், கிருஷ்ணன் சின்னப் பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி லோகநாதன், நன்றியுரை ஆற்றினார் இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்