உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக நடத்தப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள அரசு மருத்துவமனைகள் பள்ளிகள் அரசு அலுவலர்களில் ஆய்வு மேற்கொள்வார்
இந்த முகாமில் பொதுமக்களும் பங்கேற்று அவருடைய மனுக்கள் பெறப்படும். இதன்படி தேனி மாவட்டத்தில் நாளை அக்டோபர் 16 புதன்கிழமை முதல் அக்டோபர் 17 வியாழக்கிழமை காலை வரை உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது எனவே உத்தமபாளையம் தாலுகாக்கு உட்பட்ட பொதுமக்கள் காலை முதல் மாலை 6 மணி வரை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி பயன்படலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தகவல் தெரிவித்துள்ளார்.
