செய்தியாளர் ச.முருகவேலு புதுச்சேரி
மாநாட்டின் நிகழ்வில் கிராமத்தின் எல்லையில் இருந்து தாரை தப்பட்டையுடன் பேரணி துவங்கியது. பேரணியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி. சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார் .பேரணியில் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் ஆர். ராஜாங்கம் செயற்குழு தோழர்கள் என். கொளஞ்சியப்பன்,எஸ். ராமச்சந்திரன் மாநில குழு உறுப்பினர் வே. சங்கர், இடைக்கமிட்டி செயலாளர் இரகு. அன்புமணி உள்ளிட்ட இடைக்கமிட்டி தோழர்கள் மற்றும் பிரதிநிதி தோழர்களுடன் 150 க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மாநாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.புராணசிங்குபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகழகத்தில் கொடியை மாநில செயலாளர் தோழர் ராஜாங்கம் ஏற்றி வைத்தார். . 24 ஆவது மாநாட்டு கொடியை புதுச்சேரி கரும்பு விவசாயிகள் சங்க கௌரவ தலைவர் வி. வடிவேல் ஏற்றி வைத்தார். மாநாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அஞ்சலி தீர்மானத்தை இடைக்க மிட்டி உறுப்பினர் எம்.தட்சிணாமூர்த்தி வாசித்தார் .
மாநாட்டினை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் பொறுப்பாளருமான தோழர் ஜி. சீனிவாசன் துவக்கி வைத்தார். முன்னதாக இடைக்கமிட்டி உறுப்பினர் விநாயகம் வரவேற்புரை நிகழ்த்தினார். செயற்குழு உறுப்பினர்கள் என். கொளஞ்சியப்பன், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநாட்டில் புதிய கிளை செயலாளராக தோழர் இரகு. அன்புமணி தேர்வு செய்யப்பட்டார்.