வரலாற்று ஆய்வாளர், முனைவர் மணி. மாறன்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் பெரிய கோவில் என்று அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோவில் மாமன்னன் ராசராச சோழனால் கட்டப்பட்டது ஆகும். இக்கோவிலை பெரிய கோயில் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டிடக் கலை நுட்பம், இன்றளவுக்கும் கூட புரியாத புதிராக உள்ளது. இதனால், தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக் கலையை கண்டு வியந்த, யுனெஸ்கோ அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் செய்துள்ளது.
பெரிய கோவிலில் கிரிவலம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றாமல் இருந்த கிரிவலத்தை தொடர்ந்து நடத்த அரண்மனை தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களின் கோரிக்கை வைத்தனர். அரண்மனை தேவஸ்தானம், இந்திய தொல்லியல் துறை அனுமதியோடு மீண்டும் கடந்த மாதம் பவுர்ணமி நாளில் கிரிவலம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் கிரிவலம் ஏற்பாடுகளை விளம்பர பதாகைகள் மாநகரில் சில இடங்களில் வைக்கப்பட்டது அதில் “கிரிவலம்” என்ற பெயரை “திருதென்கைலாய வலம்” என பெயர் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர், முனைவர் மணி. மாறன்.
இமயமலை என்பது சிவன் உறையும் இடமாக வழிபாடு, பண்பாட்டு ரீதியாக நாம் பார்க்கிறோம். சிவன் இருக்கும் மலை இமயமலை என்றும், இமயமலையை நாம் அடிவாரத்திலிருந்து பார்க்கும் போது தங்கத்தால் போர்த்தப்பட்டது போல பளபளப்பாகவும் அற்புதமாக தெரியும். ஆகையால் மாமன்னன் ராசராசன் நம்முடைய தமிழ், இலக்கியம், பண்பாடு, புராணம் படித்தமையால் இமயமலையை இங்கு கொண்டு வந்து சுவாதிக்க முடியாது என்பதால், பெரிய கோவிலை தென் கைலாயமாக உருவாக்குகிறார் அதற்கு அவர் “தட்சண மேரு விடங்கர்” என்று பெயர் வைத்தார். “தட்சணம்” – “தென்பகுதி” எனவும், “மேரு” – “மலை” குறிக்கும் “விடங்கர்” என்பது கடவுளை குறிக்கும் ஆகவே “தட்சண மேரு விடங்கரான பெருவுடையார்” எனச் சொல்லி பெரிய கோவிலில் முழங்கினார். மாமன்னன் ராசராசன் பெரிய கோவிலை கட்டும்போது இமயமலையில் இருக்கும் சிவனுடைய காட்சி, கயிலை மலையில் இருக்கக்கூடிய சிற்பங்கள், உடன் இருக்கக்கூடிய சிவ கணங்கள் இவை அனைத்தையும் சேர்ந்த சிற்பமாக பெரிய கோவிலின் மேல் தளத்தில் இருக்கும் விமானத்தில் பெரிய பகுதியில் அமைத்துள்ளார். அதனால் இதை தமிழில் கூறும் போது தென் கைலாயம் என கூறுகிறோம்.
ஆனால், கிரிவலம் என்பதை உவமைப்படுத்தும் போது கிரி என்பதும் வடமொழி – வளம் என்பதும் வடமொழி சொற்கள். கிரிவலத்தை தமிழ் படுத்தி கூறும்போது கிரி என்பது மலையையும், வளம் என்பது உலா வருவதையும் குறிக்கும். ஆகையால் பெருவுடையார் திருக்கோவிலை சுற்றி வரும் நிகழ்வுக்கு “தென் கைலாய திருச்சுற்று உலா என நல்ல தமிழ்ச் சொல்லில் பெயர் வைக்கலாம் என்று கூறினார்.