உத்தம பாளையம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி. ஷ ஜீவனா தலைமையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாமில் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு முனைப்புடன் செயல்பட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார் பின்னர் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து உத்தமபாளையம் தாலுக்காவிற்கு உட்படட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று 17 10 2024 வியாழக்கிழமை மாலை வரை ஆய்வு மேற் கொள்ள உள்ளார்கள். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா .ஜெயபாரதி ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் அபிதாஹனிப் நில அளவை உதவி இயக்குனர் அப்பாஸ் உத்தம்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி வட்டாட்சியர் சுந்தர்லால் உள்பட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்