திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்றார், பள்ளி மேலாண்மை குழு தலைவி அமுதா முன்னுரை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக வலங்கைமான் திமுக நகர செயலாளரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகருமான பா. சிவனேசன்,வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பள்ளியில் பயிலும் 135 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. விழா நிறைவில் ஆசிரியை மங்களம் அனைவருக்கும் நன்றி கூறினார்