பேரிடர் மேலாண்மை பயிற்சி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
பாம்பு கடிக்கு பாம்பு விஷமே மருந்து

தீயணையப்பு அலுவலர் பேச்சு
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது .
ஆசிரியை முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
தேவகோட்டை தீயணைப்பு துறை அலுவலர் கணேசன் விபத்துகளில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்பதை நேரடி செயல்
விளக்கத்தின் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்.மாணவர்களிடம் அவர் பேசுகையில் , உங்களின் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்கிற எண்ணை அழையுங்கள்.பாம்பு கடித்து விட்டால் நமக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பயன்படுத்த படும் மருந்து பாம்பின் விஷத்தை எடுத்து மருந்தாக மாற்றி நமக்கு செலுத்துவார்கள்.வடகிழக்கு பருவ மழையில் நாம் எப்போதுமே முன்னெச்சரிக்கையாக குளம்,குட்டை பகுதிகளில் கவனமாக செல்ல வேண்டும் என்று பேசினார்.நிகழ்வில்
தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர்
முனீஷ்குமார் ,தீயனைப்போர் முரளீஸ்வரன் ,வைரமுத்து,ஜோசப்,விக்னேஷ்குமார்
, வசந்தகுமார் ,கண்ணன்,
ஆகியோர் பங்கேற்றனர்.மாணவர்கள் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.
நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். நிகழ்வில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.