ஜிடிஎன் கல்லூரியின் பொருளாதாரத் துறை சார்பில் நோபல் பரிசு குறித்து சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம் அவர்களும் கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் தலைமை உரையாற்றினார்.பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர். பி. ரவிச்சந்தின் நோபல் பரிசு பற்றிய சிறப்புகளை பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
இந்த விழாவில் செல்வி.துர்கை அபிராமி விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார். செல்வி. சரண்யா, செல்வி. அனுசுயா, செல்வன். கஷேந்திரன் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற மூன்று பொருளாதார வல்லுநர்கள் ( டாரன் அசெமேக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன்) பற்றியும் அவர்களின் சிறப்பான பங்களிப்புகள் பற்றியும் குறிப்பாக ஒரு நாட்டின் வளர்ச்சியில் அதன் சமூக அமைப்புகளின் பங்களிப்பு தொடர்பாக இவர்கள் மூவரும் மேற்கொண்ட ஆய்வை பற்றியும் விரிவாக பேசினார்கள். விழாவின் முடிவில் உதவிப்பேராசிரியர் அருண் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.