நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040
திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உயர்கல்வித்துறை அமைச்சர்…
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற முனைவர் கோ.வி.செழியன் முதல் முறையாக வருகை தந்து அங்கு உள்ள கலைஞர் மற்றும் அவரது தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகத்தம்மாள், முரசொலிமாறன் ஆகியோர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவரும் மாவட்ட செயலாளருமான என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் உ.மதிவாணன்,ஒன்றிய செயலாளர்கள் மலர்வண்ணன்,தாமஸ் ஆல்வா எடிசன்,மகா.குமார்,சரவணன்,வடவூர் ராஜேந்திரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன்,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.