க.தினேஷ் குமார்
செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திமுக மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சவால் விடுத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளாருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர்
கடந்த அம்மா ஆட்சியில் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
திமுக தற்போது நான்கு வருடங்கள் முடிய போகிறது தமிழகத்தில் புதிதாக எந்தவொரு திட்டத்தை கொண்டு வரவில்லை
எனவே அம்மாவின் ஆட்சியில் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் திமுகவின் நான்கு ஆண்டு திட்டங்கள் குறித்து பொது மேடையில் நாங்கள் விவாதிக்க தயார், திமுக தயாரா என சவால் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் விவேகானந்தன் அக்கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் தங்களை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் இணைத்து கொண்டனர்.
அப்போது மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன்,மாவட்ட இணைச்செயலாளர் லீலாசுப்பிரமணியம், மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் ர.ரமேஷ்,அம்மா பேரவை மாநில துணைத்தலைவர் டில்லி பாபு,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தம்பாகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.