திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சிகள்,ஒரு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்காளப் பெருமக்களுக்கு வாக்களித்தமைக்கு நன்றி கூற வருகை தந்த நாகை பாராளுமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் எம்பி, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய பூண்டி கே.கலைவாணன் ஆகியோருக்கு கொட்டை ஒரு ஊராட்சியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அரையூர், மாணிக்கமங்கலம், சாராநத்தம், மாத்தூர், கண்டியூர், சித்தன் வாலூர்,ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம் உள்ளிட்ட ஐம்பது ஊராட்சிகளிலும், வலங்கைமான் பேரூராட்சி மன்ற பகுதிகளிலும் வாக்காள பெருமக்களுக்கு வாக்களித்தமைக்கு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி. அன்பரசன்,வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி,வலங்கைமான் நகர செயலாளர் பா. சிவனேசன்,திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் நீலன் அசோகன், வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி, அரவத்தூர் மணி, வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ். எம். செந்தில்குமார், வலங்கைமான் நகர திமுக அவை தலைவர் சோம.மாணிக்கவாசகம்,
வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், வலங்கைமான் நகர திமுக பொருளாளர் புருஷோத்தமன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதி சிங்கு தெரு எஸ். ஆர். ராஜேஷ், விருப்பாச்சிபுரம் ராயல் கோ. திருநாவுக்கரசு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக
கலந்து கொண்டனர்.
