புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் விவிலிய மாத நிறைவு விழா கண்காட்சி….
மதுரை, திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்பணி. ஜார்ஜ் எட்வின் தலைமை யில் விவிலிய மாத நிறைவு விழாவாக விவிலியக் கண்காட்சி – 2024 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை அன்பியங்கள் மற்றும் பங்கின் மறைக்கல்வி குழுவினர் இணைந்து நடத்தினர்.இந்நிகழ்ச்சியில் விவிலியம் தொடர்பான , அரிய பல தகவல்கள், புதுமையான செயல்பாடுகள், விவிலியமும் அறிவியலும், விளையாட்டுக்கள், வரைதல், மாறுவேடம், நடத்தப் பட்டு சிறந்த வழி காட்டி அன்பியம் – 2024 பரிசுகளும் வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 110 குழந்தைகளும் பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.