புதுச்சேரி மனித வள அதிகாரிகள் (HR CIRCLE) எட்டாம் ஆண்டு விழா ஹோட்டல் ரெசிடென்சி டவரில் நடைபெற்றது, இதில் மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பு மற்றும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டு பயிற்சி நடத்தப்பட்டது

இதில் லெனோவா கம்பெனி இயக்குனர் திரு.ஸ்ரீகாந்த் . சவேரா இந்தியா நிறுவன அதிகாரி திரு. சிவஞானம் மற்றும் மனிதவள அதிகாரிகள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் நமது பாரம்பரிய பண்பாட்டு, கலாச்சாரம் மிகுந்த தமிழரின் வாழ்வியல் பனைமரம் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் சாரிடபிள் சொசைட்டி நிறுவனர் பனை ஆனந்தன் அவர்களுக்கு அவரின் சமூக சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்,
விருதினை நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர் புதுச்சேரி சைபர் கிராம் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) திரு பாஸ்கர் அவர்கள் வழங்கினார்கள் இதில் தன்னார்வலர்கள் நரேந்திரன், திருமதி ராஜேஸ்வரி நரேந்திரன், பிரசாத், ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றுக்கொண்டனர்.