சிங்கப்பூர் இந்தியன் அசோசியேஷன் தலைவர் திரு, இலியா தம்பி அவர்கள் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் சென்றுள்ள பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி நிர்வாகிகள் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள் தலைமையில் சென்று அங்கு நமது தமிழரின் பாரம்பரிய பண்பாடு கலாச்சாரம் நிறைந்த வாழ்வியல் மரமான பனைமரம் மீட்பு பயணத்தின் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் இந்தியன் அசோசியேஷன் (தமிழ் சங்கச்சங்க) தலைவர் திரு. எலியா தம்பி அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அவர்கள் பூரணாங்குப்பம் குழுவினரை அன்புடன் வரவேற்று பனைமரம் பற்றிய செய்தியை கேட்டு அறிந்து கொண்டார்கள், அங்கு வந்திருந்த சிங்கப்பூர் மகளிர் அமைப்பினருக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட ஆபரண நகைகள் மற்றும் குல்லா பூஜை கூட ஆகியவற்றை வழங்கி சிறப்பு செய்தனர்,

இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இடோன் ஹவுஸ் இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியை திருமதி, கார்த்திகா பாலா அவர்கள் தலைமையில் போன்ல தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி திலகா நடராஜன் அவர்கள் முன்னிலையில் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மகளிர் அமைப்பு மலர், நித்தியா, ரேவதி, ஜனனி, மற்றும் சீனப் பெண்மணி, நவம்பர் உட்பட மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நமது தமிழரின் வாழ்வியல் மரமான பனைமரத்தை பற்றி விரிவாக தெரிந்து கொண்டனர்

மேலும் இந்திய அசோசேஷன் தலைவர் திரு இளியா தம்பி அவர்கள் சிங்கப்பூர் அரசிடம் கலந்தாலோசித்து பனைமரம் சிங்கப்பூரில் வளர்க்க இடம் தேர்வு செய்து விரைவில் தங்களுக்கு கூறுகிறேன் தாங்கள் மீண்டும் வந்து பனவிதை நடவு செய்யுங்கள் மீண்டும் தங்களை அன்புடன் அழைக்கிறேன் என்று உறுதியளித்தார்,

நிகழ்வில் பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் சாரிடபிள் சொசைட்டி தன்னார்வளர்கள் திருமதி.கற்பகம் ஆனந்தன், சதீஷ், வண்டிமுத்து, ஸ்டீபன் ராயப்பா, லெனின், பாலச்சந்தர், ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், அப்துல் காதர், கோபிநாத், எழிலரசன், பங்கு பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *