C K RAJAN
Cuddalore District Reporter
9488471235

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சிஐஎல் சுரங்கங்களுக்கு, அவற்றின் செயல்திறன் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்காக, மதிப்புமிக்க- தேசிய 5 நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்பட்டன…!
அதிக அளவிலான (80%) 5 நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்ற என்எல்சிஐஎல் சுரங்கங்கள்…
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு, தேசிய அளவிலான மதிப்புமிக்க 5 நட்சத்திர மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கி மத்திய நிலக்கரி அமைச்சகம் கௌரவித்துள்ளது. நேற்று புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மற்றும் மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோர் விருதுகளை வழங்கினார். என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு பிரசன்ன குமார் மோட்டுபள்ளி அவர்களுடன், நிறுவன சுரங்கத் துறை இயக்குநரும், திட்டங்கள் & செயலாக்கத்துறை கூடுதல் இயக்குநருமான டாக்டர் சுரேஷ் சந்திர சுமன், நிறுவன சுரங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் இணைந்து, இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிலக்கரி அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த நட்சத்திர மதிப்பீட்டு கொள்கை என்பது, நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மாற்றத்திற்கான முயற்சியாகும். பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் சுரங்கங்களை மதிப்பிடுவதற்கும், தரப்படுத்துவதற்கும் ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவுவதன் மூலம், நிலக்கரி/பழுப்பு நிலக்கரி உற்பத்தியாளர்களிடையே வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் போட்டித்தன்மையை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது.
சுரங்கங்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிப்பதற்கும், போட்டித்தன்மையை வளர்ப்பதற்கும், நிலக்கரி அமைச்சகம் அனைத்து சுரங்கங்களுக்கும் நட்சத்திர மதிப்பீடுகளை வழங்குகிறது.

இந்த மதிப்பீட்டில் அவற்றின் செயல்திறன் மற்றும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை அளவீடுகள் ஆகியனவும் அடங்கும். சுரங்க உரிமையாளர்கள், ஸ்டார் ரேட்டிங் போர்ட்டல் என்ற பிரத்யேக போர்ட்டல் மூலம், தங்களின் சுரங்க செயல்திறன்களை சுய- அறிக்கையாக பதிவேற்றுகிறார்கள். பின்னர், இது நிலக்கரி, பத்துப்பாட்டாளர் அமைப்பு மூலம் சரிபார்க்கப்படுகிறது. 2022-23-ஆம் நிதியாண்டிற்கான மதிப்பீடுகள் ஜூன் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஏப்ரல் 2024 இல் அறிவிக்கப்பட்டன.
இதில் பங்கேற்ற 380 சுரங்கங்களில், 43 சுரங்கங்கள் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றன. இவற்றில், பர்ஸிங்சார் பழுப்பு நிலக்கரி சுரங்கம், நெய்வேலி சுரங்கம் |A, சுரங்கம் | மற்றும் தலபிரா || & II திறந்த வெளி நிலக்கரிச் சுரங்கம் ஆகிய என்எல்சிஐஎல் சுரங்கங்கள் 80 சதவிகித ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன என்பது பெருமைக்குரியதாகும். மேலும், நெய்வேலி சுரங்கம்-|| நான்கு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. கூடுதலாக, ராஜஸ்தானில் உள்ள பர்ஸிங்சார் சுரங்கம் தேசிய அளவில் இரண்டாவது இடத்தையும், நெய்வேலி சுரங்கம்-IA ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அங்கீகாரமானது, தொழில் துறையில் சிறந்து விளங்குவதற்கான என்எல்சி இந்தியா நிறுவனத்தின் உறுதிப்பாட்டை முன்னிலைப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *