இராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையை 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் பணியையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவத்துறை இணை இயக்குனர் அவர்களிடம் கேட்டறிந்தார்
மேலும் தலைமை மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவக்கருவிகளும் மருத்துவர்கள் மருத்துவப்பணியாளர்கள் அனைவரையும் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளது எனவும் டிசம்பர் மாதத்தில் மருத்துவமனையின் கட்டிடப்பணி முழுவதும் முடிவடைந்து மருத்துவத்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது அதன்பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் விரைவில் திறப்பு விழா நடைபெறும் எனக்கூறினார்.
இந்நிகழ்வில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார். இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் மருத்துவத்துறை இணை இயக்குனர் பாபுஜீ
மருத்துவ அதிகாரி மாரியப்பன் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப்பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.