திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அருகே குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்த மழை நீரை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியம் பெரிய குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நேற்று பெய்த மழையின் காரணமாக கட்டடத்தின் மேல் குறையில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் மழைநீர் பள்ளியின் வகுப்பறையில் சொட்டு சொட்டாக விழுந்தது இதனை பார்த்த பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் அபாயகரமாக மாணவர்களை படிக்கட்டு இல்லாத கட்டடத்தின் மேல் ஏற வைத்து மழை நீரை வடிய வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெற்றோர்களை அதிர்ச்சி கொள்ளாக்கியது. தமிழக அரசு நடத்தும் கல்லூரி மற்றும் பள்ளி கட்டிடங்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் படிப்பதற்காக பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்பி வைத்தால் ஆபத்தான வேலைகளை ஆசிரியர்கள் மாணவர்களிடம் வாங்குகிறார்கள் என பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். மேலும் பெரிய குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20