அகரம் முத்தாலம்மன் கோயில் விழா கோலாகலம்.பக்தர்கள் குவிந்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்த செப். 1 ல் அம்மனின் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனின் உத்தரவு கிடைக்க திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின. அதன்படி திருவிழா சாட்டுதல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் அக் 13 இரவு 10 :00 மணிக்கு தொடங்கியது. மறுநாள் அதிகாலையில் திருவிழா சாட்டுதல் பெற்று வானவேடிக்கையுடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவிற்கான கங்கணம் கட்டிக் கொண்டனர். ஒவ்வொரு நாள் மாலையும் அம்மனின் பண்டார பெட்டி , உற்ஸவர் மண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளல் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கண் திறப்பு மேள தாள வாத்தியங்கள் முழங்க சகல நாத தீபாராதனைகளுடன் அம்மனின் திருவுருவத்தில் திரை நீக்கி கண் திறப்பு நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி அம்மன் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதிகாலை 12:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் உலா வந்து வான காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். விடிய விடிய வான வேடிக்கைகள் நடைபெற்றன.

இதை தொடர்ந்து பிற்பகல் 1:30 மணிக்கு சொருகு பட்டை சப்பரத்தில் அம்மன் உலா வந்து பல்வேறு திருக்கண்களில் அருள் பாலித்தப்படி பூஞ்சோலைக்கு எழுந்தருளால் நடைபெற்றது.

ஏற்பாடுகளை அகரம் முத்தாலம்மன் கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் செய்தனர்,விழவில் சிறப்பு விருந்தினராக அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சக்திவேல், தாடிக்கொம்பு லட்சுமணன் மளிகை ஜென்ரல் ஸ்டோர் உரிமையாளர் மூர்த்தி, திண்டுக்கல் நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகவேல், சூர்யா அக்ரோ டிரேடர்ஸ் உரிமையாளர் முருகன், அம்பாள் எலக்ட்ரிகல் உரிமையாளர் பாரத், எஸ்.எஸ்., மீட்டிங்கால் உரிமையாளர் சுரேஷ்,, கோடீஸ்வரர் சிட்டி டெவலப்பர்ஸ் இயக்குனர் குமரேசன், எஸ்.கே., இன்ஜினியரிங் உரிமையாளர் செந்தில்குமார், நியூ இந்துஸ்தான் ஸ்டில் நிர்வாக இயக்குனர் நடராஜன், ரத்னா அண்ட் கோ உரிமையாளர்கள் மூர்த்தி, ரத்தினவேல், எஸ்.வி.ஆர்., நிறுவன இயக்குனர் செல்வகுமார், நித்ரா பர்னிச்சர்ஸ் இயக்குனர்கள் ராஜேந்திரன், சுகன், அருணா சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர் மணிகண்டன், கார்த்திக், ஆக்சிஸ் பிரியாணி ஓட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், ரத்னா எல்.கே.எஸ்.,ஜூவல்லர்ஸ் நகை உரிமையாளர்கள் கண்ணன், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள் சாமி, வேல்முருகன் ஏஜென்சி உரிமையாளர் ராமமூர்த்தி, கிரானைட் வேர்ல்ட் உரிமையாளர் நாகராஜன், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் லதா தர்மராஜ் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *