தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி.முத்துசாரதா தலைமையிலான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நகர் பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி அரங்கை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமி.முத்துசாரதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுஸதலைவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
சட்ட விழிப்புணர்வு துண்டு பிரச்சனைகளை வழங்கியும் அங்கு பங்குபெற்ற பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்தும் இலவச சட்ட உதவி மையத்தின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். அந்நிகழ்வில்.திரிவேணி, செயலாளர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு.ரவிசந்திரன், ஆணையர் திண்டுக்கல் மாநகராட்சி பங்கு பெற்று விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை வழங்கினார்.
மேலும் இதைத் தொடர்ந்து
திண்டுக்கல் மாநகரில் அபிராமி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கிழக்குப் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சிறுநீா் கழித்தும், குப்பைகளை கொட்டியும் அநாகாிகமான செயல்கள் நடைபெறுவது குறித்தும் புகாா் பெறப்பட்ட நிலையில், அது குறித்து ஆய்வு மேற்கொண்டு, சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் இருக்கும் கழிவுகளை அகற்றி சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதத்தில் அந்த இடத்தில் சட்ட விரோத செயல்களை தடுக்கும் விதத்தில் கம்பிவேலி அமைக்குமாறு மாநகராட்சி ஆணையா் அவா்களுக்கு அறிவுறுத்தினாா். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.