குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024 -2025 ஆண்டுக்கான தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் 86 மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயவேல் தலைமை வகித்தார்,
பள்ளியின் முதுகலை ஆசிரியர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுந்தரி முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் செந்தில் சேரன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் மற்றும் குடவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன் திறப்புரையாற்றினார்.
இதில் 86 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். நிறைவாக பள்ளி முதுகலை ஆசிரியர் மகேஷ் குமார் அனைவருக்கும் நன்றி உரை வழங்கினார்.