கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிறை,குறை,தீர்வு மேம்பாடு இவைகளை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் 29.10.2024 நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்துள்ளார்.‍

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 29.10.2024 நாளன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அரங்கம் எண்.115-இல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல்/ கிசான் கடன் அட்டையுடன் காலை 8.00 மணிமுதல் 10.00 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *