மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் தஸ்லீம் பானு தலைமையில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை சித்ரா வரவேற்றார். கூட்டத்தில்
டி.என்.எஸ்.இ.டி. பெற்றோர் செயலி, வங்கி கணக்கு, தேவையான வகுப்பறை கட்டிடங்கள், இடிக்க வேண்டிய கட்டிடங்கள், சுற்றுச்சுவர் பழுதுபார்த்தல், போதைப் பொருள் இல்லா பள்ளி வளாகம், போக்சோ சட்டம், உள்புகார் குழு, பள்ளிக் கல்வித்துறையின் குழந்தைகள் மைய எண் 14417 மற்றும் 1098 விழிப்புணர்வு, சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பல்வேறு போட்டியில் பங்கு பெற செய்தல், திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க முயற்சி எடுப்பது, சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்வது, கற்றல் குறைபாடு உள்ள குழந்தை களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆசிரியர்கள் விஜய லட்சுமி, தமிழ் செல்வி, அகிலா, அம்பிகா, அனுஷியா, சுகுமாறன் ஆகியோர் அவரவர் வகுப்பு குழந்தை களின் கற்றல் நிலையை குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஆசிரியர்
ராஜவடிவேல் நன்றி கூறினார்.