திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள புல்வெட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவரும் தொடர் மழையினால் வரும் நீர் வரத்தின் காரணமாக கண்மாய், குளங்கள் நிரம்பி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 336 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பட்டி புல்வெட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மற்றும்
பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.