பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வெங்கலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பாரம்பரிய தென்னை ரகமான அரசம்பட்டி நெட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடி விற்பனை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வெங்கலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 4500 எண்கள் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு தென்னங்கன்று ரூபாய் 65 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பண்ணை மேலாளரை நேரில் அணுகியோ அல்லது செ. விஜய காண்டிபன் வேப்பந்தட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.