திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2026 ஆம் ஆண்டுக்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சு . சுமத்ரா தலைமை வகித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. நாவளவன்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் க. செல்வம், வசந்தி பாஸ்கர், கல்வியாளர் சிங்கு தெரு எஸ்.ஆர்.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் கவிதா அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு “பள்ளி அளவில் போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழுவில்” பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் வசந்தி பாஸ்கரை இணைத்துக் கொண்டு செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (pocso) பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பணியிடங்களில் பெண்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும், வழிவகை செய்யும் பொருட்டு உள் புகார் குழு( ICC) வில் கல்வியாளர் எஸ். ஆர். ரமேஷ் அவர்களை இணைந்து செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.