இராஜபாளையம், ஸ்ரீமான் ராவ்பகதூர் ஏகேடி.தர்மராஜா அவர்களின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு பழைபாளையம் மைதானத்தில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு நகர்மன்ற தலைவி ஏஏஎஸ்.பவித்ரா ஷியாம் தலைமையில் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பழையபாளையம் ராஜூக்கள் மகாசபைத் தலைவர் கேஜி.பிரகாஷ், மகாசபை நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நந்தா, ஊர்ப்பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.