திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2026 ஆம் ஆண்டுக்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் அமுதா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமாவதி, ஆசிரியர் பிரதிநிதி சார்லட் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குலாம் மைதீன், செழியன், பிரியா, மேலாண்மை குழு துணை தலைவர் சுதா, மற்றும் துணை தலைமை ஆசிரியை புவனேஸ்வரி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க வேண்டும். பள்ளிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும்.
பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து பழுதடைந்து உள்ள கழிவறையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். பள்ளியின் நுழைவாயிலுக்கு மேலாக கேமரா பொருத்த வேண்டும். பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பள்ளியின் முன்புறம் இடத்தை ஆக்கிரமித்து கடை மற்றும் பிரியாணி கடை ஆகியவற்றை அகற்றக்கோரி வலங்கைமான் காவல் நிலையத்தில் பள்ளி மேலாண்மை குழு சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.