கோவையில் அனைத்து சமுதாயத்தினர் இணைந்து கொண்டாடிய சமத்துவ தீபாவளி
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி
கோவையில் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என அனைத்து சமுதாயத்தினர் இணைந்து தீபாவளியை கொண்டாடியதுடன்,தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள்,
இனிப்புகள் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்…
கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேரம்பாளையத்தில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சமத்துவ தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது..
ஒவ்வொரு ஆண்டும் வேற்றுமையை மறந்து ஒற்றுமை காண்போம் என கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் இந்து,முஸ்லீம்,கிறிஸ்தவர்,சீக்கியர் என அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து கலந்து கொண்டனர்..
தொடர்ந்து நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
ஜாதி,மத,இன வேறுபாடுகளின்றி அனைவரும் இணைந்து ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது..
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும்,
சிறுபான்மை ஆணைய உறுப்பினரும் ஆன முகம்மது ரபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளரும் காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் உறுப்பினரும் ஆன எம்.எம்.இராமசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள்,இனிப்புகளை வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில்,பல்சமய நல்லுறவு இயக்கத்தின் கோவை மாவட்ட தலைவர் காந்தி மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் கோட்டை செல்லப்பா,மாநில துணைத்தலைவர் எஸ்.ஏ. பசீர் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாகீர், மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் இஸ்மாயில் அபிபுல்லா,ஜீவ சாந்தி சலீம், கோவை தல்ஹா அபுதாஹிர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…