குடவாசலில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேருந்து நிலையத்தில் கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,ரேஷன் கடைகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய உணவு தானியங்களை முறையாக வழங்க கோரியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசாங்கம் ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக அடுப்பு பற்ற வைத்து நூதன முறையில் மாதர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோமதி தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரி, நகர செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் பமிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் நீடாமங்கலம் சுமதி உள்பட இதில் கலந்துகொண்ட பெண்கள் விலைவாசியை கட்டுப்படுத்த கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.