தேனி நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மாவட்ட தலைநகரான தேனியில் நாடார் சரஸ்வதி கல்லூரிகளின் ஒரு அங்கமான நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் கல்லூரி ஆடிட்டோரியத்தில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும தலைவருமான கல்வித் தந்தை ராஜமோகன் நடைபெற்ற கருத்தரங்க விழாவிற்கு தலைமை வகித்தார்.கல்லூரி செயலாளர் ராஜ்குமார் செயலாளர் மகேஸ்வரன் இணை செயலாளர் நவீன் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி கட்டிட வியல் துறைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார் கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார் இந்த கருத்தரங்கில் சென்னை எல் அன் டி நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டிடவியல் துறை மேம்பாடுகள் பற்றிய கருத்துள்ள மாணவர்களுக்கு பயன்படும் தேவையான கருத்துக்களை எடுத்துக் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை உப தலைவர் கணேஷ் பொதுச் செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இன்ஜினியரிங் கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன் சத்தியா கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் மணிமாறன் பேராசிரியை சிந்து உள்ளிட்டோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர் கட்டடமைப்பு பொறியியல் துறைத் தலைவர் நாகரத்தினம் நன்றி கூறினார்