ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு பகுதியில் தென்னந்தோப்புகளில் யானை கூட்டங்கள் அட்டகாசம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இதில் நச்சாடை பேரி பகுதியில் கடந்த இரு தினங்களாக யானை கூட்டங்கள் 5 முதல் 6 வரை குட்டிகளுடன் வந்து மரங்களை ஒடித்து நாசம் செய்து வலம் வந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக எந்த காலத்திலும் இல்லாமல் பனை மரங்களையும் ஒடித்து நாசம் செய்வது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கருப்பசாமி கோவில் வரை செல்லும் சாலையில் யானை கூட்டங்கள் சாலையிலேயே உலா வந்து கொண்டிருப்பது விவசாயிகளுடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த யானைக் கூட்டங்கள் திரும்பவும் காட்டிற்குள் செல்வதற்கு வனத்துறையினர் உரிய வழிமுறைகளை செய்யுமாறு நச்சாடை பேரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.