வலங்கைமான்தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பட்டாசு, இனிப்பு,ரூபாய் 1000 வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் பணி புரியும்தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள், இனிப்புகள், ரூபாய் 1000 ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் கலந்துகொண்டு வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பா. சிவனேசன், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா சிவனேசன்,துணைத் தலைவர் க. தனித் தமிழ்மாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு வழங்கினர். பேரூராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.