மது பழக்கத்தால் தீபாவளி திருநாள் அன்று மூன்று வாலிபர்கள் பரிதாப பலி தேனி மாவட்டம் கூடலூர் ஆசாரிமார் தெருவை சேர்ந்த சரவணன் மகன் லிங்கேஷ் வயசு 24 இதே தெருவைச் சேர்ந்த விஜய கணேசன் என்பவரின் மகன் சேவக் வயது 24 மணிகண்டன் மகன் சஞ்சய் 22 அச்சுதன் மகன் மோனிஷ் வயசு 22 சுந்தரம் மகன் கேசவன் 23 நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று தீபாவளி திருநாளை முன்னிட்டு கம்பம் நகருக்கு மது அருந்த மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் இரண்டு பேர் மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் சென்றுள்ளனர் கம்பம் நகரில் மது அருந்திவிட்டு மீண்டும் கம்பத்திலிருந்து கூடலூருக்கு வரும்போது போட்டி போட்டுக் கொண்டு மது போதையில் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதும் போல் வீவிங் செய்தபடி வந்துள்ளனர் அப்போது கம்பம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மடம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே லிங்கேஷ் மற்றும் சேவக் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரையும் அந்த வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார் மற்ற இரண்டு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வனிதா மணி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார் உலகமெங்கும் கொண்டாடப்படும் மாபெரும் பெஸ்ட்வில் திருநாளான தீபாவளி திருநாளன்று மது என்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பது போல் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை என்பது நேற்று நடைபெற்ற சம்பவமான மது போதையால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு இந்த சம்பவம் தேனி மாவட்டம் மற்றும் கம்பம் மற்றும் கூடலூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.