நெட்டூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 117 வது ஜெயந்தி விழா ;-
மற்றும் 62-வது குருபூஜை விழா ;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில்
பேருந்து நிறுத்தம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் 117 வது ஜெயந்தி விழா
மற்றும் 62-வது குருபூஜை விழா நடைப்பெற்றது
முன்னாள் ஆலங்குளம் வட்டார தலைவரும் மாவட்ட தலைவருமான அலக்ஸ் தலைமை தாங்கினார்
ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சி துணை தலைவர் லெனின் , நெட்டூர் கிளை நிர்வாகிகள் இசக்கிமுத்து ,முப்பிடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நெட்டூர் ஊர் சார்பில் தேவர் சமுதாய நாட்டாமை செந்தில் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருஞானம் ஆகியோர் வரவேற்றனர் விழாவில் முன்னாள் முன்னாள் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் ராமசுப்பு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முத்து ராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் சுப்பிரமணியன் பாரத், முப்பிடாதி, கட்சி நிர்வாகிகள் ஊர் பெதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனர்