திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாரதிதாசன் ஐஏஎஸ் மற்றும் டி என் பி எஸ் சி அகாடமி சார்பில் டி என் பி எஸ் சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா..

மன்னார்குடி பாரதிதாசன் ஐஏஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி அகாடமி சார்பாக அண்மையில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளில் ஏழு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது பயிற்சி மையத்தின் நிறுவனர் கே.அன்பழகன் தலைமை வகித்தார்.

கிராம நிர்வாக அலுவலர் சுதாபாரதி வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் த.லெ. ராதாகிருஷ்ணன் கல்வியாளர் பி. தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் எஸ். சாந்தகுமார், தன்னம்பிக்கை பயிற்சியாளரும் என்சிசி அதிகாரியுமான முனைவர். எஸ். அன்பரசு ஆகியோர் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பேசினார் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட துணை ஆளுநர் மீனாட்சி சூரிய பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது “வெற்றி பெற வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவோடு உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும், பெண்கள் அரசுப்பணி பெறுவதால் சமூக அங்கீகாரம் தன்னம்பிக்கை வளர்வதோடு மட்டுமல்லாமல் அது சமுதாய வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணி பெற்றவர்கள் நேர்மையோடும் சமூக நலனில் அக்கறையோடும் செயல்பட வேண்டும்” என்றார் நிறைவாக வன காவலர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *