விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று வனத்துறை மற்றும் காவல்துறை தடை விதித்து கண்காணித்து வந்த நிலையில் அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு ஒரு குழுவினர் குடும்பத்துடன்
எஸ் வளைவு என்ற இடத்தில் உள்ள ஆற்றில் உற்சாக குளியல் போட்டனர் ஒரு கட்டத்தில். உடன் வந்த பெண்களை ஆட்டோவில் வீடுகளுக்கு அனுப்பிவிட்டு. ஆண்கள் 9 பேர்மட்டும் தொடர்ந்து குளித்துவந்த நிலையில் திடீரென தண்ணீர் வரத்து அதிகமாகவே அனைவரும் தப்பித்து எதிர் திசை கரைக்கு ஓடி ஒதுங்கினர்.ஆனால் நேரம் செல்லச்செல்ல தண்ணீர் வரத்து அதிகமான நிலையில் திரும்பி வர இயலாமல் தவித்தனர்
அந்த பகுதியில் செல்போன் டவர் கிடைக்காது என்பதால் இவர்களின் நிலையை வெளியே யாருக்கும் தெரிவிக்க முடியாமல் தவித்தனர்.
இருட்டாகிவிட்டது ஒருவழியாக எப்படியோ வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு.மற்றும் தீயனைப்பு துறை நிலைய அலுவலர் சீனிவாசனுக்கும் தகவல் தெரிந்து அந்த பகுதிக்கு சென்று அனைவரையும் மீட்க கடுமையாக போராடி மலைவாழ் மக்கள் சிலரின் உதவியோடு அனைவரையும் மீட்டனர். சுமார் மூன்று மணி நேரம் வாழ்வா சாவா என்ற நிலையில் மிகவும் பதட்டத்தில் இருந்ததாக மீண்டு வந்தவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.