தென்காசி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள
திருநாதகிரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசால பூஜையுடன் தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு திருநாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.