விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாஸ்தா கோவில் உள்ளது. இங்கு நகரையாறு உற்பத்தியாகி தண்ணீர் பெருக்கெடுத்து வருவது வழக்கம். மழைக்காலங்களில் இங்கு சனி, ஞாயிறு உள்பட விடுமுறை தினங்களில் ஏராளமான மக்கள் இங்கு வந்து குளித்து குளிர்ச்சியை அனுபவித்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் முதல் சனி, ஞாயிறு தினங்களில் தொடர் விடுமுறையானதால் நிறைய பனம் செலவு செய்து வெளியூர் சுற்றுலா தளங்களுக்கு செல்லாமல் சுமார் 30 கிராமத்து மக்கள் குடும்பம் குடும்பமாக இயற்கை எழில் பொங்கும் இங்குவந்து ஆயிரக்கணக்கானோர் குளித்து மகிழ்ந்து குளிர்ச்சியை அனுபவித்து செல்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டுவனச்சரகர் கார்த்திகேயன். வனவர் கனகராஜ் தலைமையில் இப்பகுதியில் உள்ள வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர்.
இதற்கான.முன்னேற்பாடுகளை செய்து வாகனங்கள் மூலம் அனைவரையும் பத்திரமாக அழைத்துச்சென்று பாதுகாப்பாக திருப்பி அனுப்புகின்றனர் பராமரிப்பு செலவுக்காக
நபர் ஒன்றுக்கு ரூ.40- வீதம் கட்டணம் வசூல் செய்து அதற்கான ரசீதும் வழங்கப்படுகிறது.
ஆற்றில் சின்ன சின்ன நீர்வீழ்ச்சிகளும், ஆழம் குறைவாக உள்ள தடாகங்களும், நீளமான நீர் அருவிகளும், வழுக்குப் பாறைகளும் ஏராளம் அமைந்துள்ளது.வரும் அனைவரையும் சரியாக சோதனை செய்து உரிய பாதுகாப்புடன் அவர்களை குளிக்க அனுமதி அளித்து பாதுகாப்புடன் திரும்பிச் செல்வதற்கு உதவி செய்து வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் எங்கும் பிளாஸ்ட்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கான முடவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது மலைப்பகுதியில் மழை பெய்தால் உடனடியாக அத்தனை பேரையும் திரும்ப அழைத்து பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து சோதனைச் சாவடி பகுதியில் சேர்த்து விடுகின்றனர்.
இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தேவைக்கேற்ப சேத்தூர் காவல் துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.