கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஏழாம் அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவினை ஏழாம் அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தளவாய் சங்கு தலைமையேற்று முதல் மரக்கன்றை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.

துணை தளவாய் வெங்கடாசலம், உதவித்தளவாய் மகேஷ்வரி, உதவி ஆய்வாளர் பேபி நிர்மலா, கவுன்சிலர் ராஜா மற்றும் ஏழாம் அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் காவலர்கள், விவசாய சங்கத்தினர், வேளான் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

நாவல், மகாகனி, கொய்யா, புங்கன், வேம்பு, எலுமிச்சம், காட்டுநெல்லி, பாதாம், தேங்கு, வசந்தராணி, புளியமரம், சந்தனமரம் உள்ளிட்ட மரச்செடிகளை ஏழாம் அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகத்தில் நட்டனர்.

விழாவில் பேசிய தளவாய் சங்கு, 1980களில் இமயமலையில் மரங்கள் வெட்டப்படுவதை சிப்கோ என்ற இயக்கம் தடுத்து நிறுத்தியதால் அங்கு நல்ல மழை பொழிகிறது. அதேபோல் தென்னிந்தியாவில் அப்டிகோ என்ற அமைப்பு மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து மரங்களை பாதுகாத்து வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு மரத்தையாவது நடவேண்டுமென பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *