ராஜபாளையம். புதுப்பாளையம் விவேகானந்தர் தெருவில் உள்ள இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பொது மன்டபத்தில் வைத்து பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியர் மற்றும் எல்கேஜி முதல் கல்லூரி வரை உள்ள மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது
இல்லத்துப் பிள்ளைமார் சமூக பொது நல பண்டு தலைவர் ஆறுமுகம் என்ற துரைராஜ் செயலாளர் பரமசிவம் பொருளாளர் ராஜசேகர் புதுப்பாளையம் தலைவர் முருகேசன் செயலாளர் குமார் பழையபாளையம் தலைவர் அய்யனார் செயலாளர் அந்தோணி கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினர்
இந்நிகழ்ச்சியில் பொதுநல பண்டு மற்றும் புதுப்பாளையம் பழைய பாளையம் கிளை நிர்வாகிகள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்