ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்று பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு , மாவரசி அம்மன் கோவில் உள்ளிட்ட பிட்டு களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கங்களும் நிரம்பின முடங்கியார் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஆதலால் மருங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், புதுக்குளம் பிரண்டை குளம் கண்மாய், புளியங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 6-வது மைல் குடிநீர் தேக்க அணை நிரம்பியது. இதனை ஆய்வு செய்த நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம். ஆணையாளர் நாகராஜ் ஆகியோரின் ஆலோசனையின்பேரில். 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குடிநீர் தேக்கத்தில் நீர் நிரம்பியதால் நகர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு .இருக்காது என்று கூறப்படுகிறது இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்