போடிநாயக்கனூர் சி பி ஏ என்ற ஏல விவசாயிகள் சங்க கல்லூரி வளாகத்தில் குறுங்காடுகள் அமைப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள சி பி ஏ என்ற ஏல விவசாயிகள் சங்க கல்லூரி வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் கானகம் குறுங்காடுகள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது
உத்தமபாளையம் நன்செய் தன்னார்வ அமைப்பு சார்பில் கல்லூரி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தலைவர் எஸ் வி சுப்ரமணியன் கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் உப தலைவர் எஸ் ராமநாதன் நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சி.பிரபு கல்லூரியின் முதல்வர் எஸ் சிவக்குமார் கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜ் நாட்டு நலத்திட்ட பணி அலுவலர்கள் முனைவர் சி பழனிவேல் ராஜன் முனைவர் கருப்பசாமி முனைவர் ஏ.ஆர் மணிகண்டன் முனைவர் வி. விமலா முனைவர் டி ராமலட்சுமி கல்லூரி பேராசிரியர்கள் பி. சுகுணா செல்வராணி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் எஸ் நாகலிங்கம்
ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெகு சிறப்பாக செய்திருந்தனர்