திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன முற்றுகை ஆர்ப்பாட்டம்.. சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து மதநல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்டம் சார்பாக 08.11.2024 அன்று மாவட்டத் தலைவர் விலாயத் உசேன் தலைமையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திரையரங்கு முகப்பு வாயிலில் திரையரங்கம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது
இந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மாஸ் அப்துல் அஜிஸ் மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் லத்தீப் மாவட்ட அமைப்பு செயலாளர் உமர் பாரூக் மாவட்டச் செயலாளர் ஜெமீன்
எஸ் டி டி யு மாவட்ட தலைவர் முபாரக்
திருவாரூர் தொகுதி தலைவர் கூத்தாநல்லூர் அஜிஸ்
திருவாரூர்
நகரத் தலைவர் சவுக்கத் அலி ஆகியோர் முன்னிலையில் முற்றுகை போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்